Posted by Shyam sharai | Posted in living | Posted on 1:00 AM
நமது மூதாதையர்களின் பழக்கவழக்கங்கள் மரபு மூலமாக மட்டும் கடத்தப்படுவதில்லை.
என் தந்தை ஞாயிற்று கிழமை காலையில் உண்ணாமல் இருப்பதை பழக்கமாக வைத்திருக்கிறார்.
அது அவர் தந்தையிடமிருந்து கூட கற்றிறுக்கலாம். ஏன் என்றால் என் தாத்தாவும் அவ்வாறே கடைபிடித்திருந்து வந்தார்.
அம்மாதிரி மரபு வழியாக கடத்தப்படாமல் எனக்கு வந்தப் பழக்கம் நாட்குறிப்பு எழுதுவது.எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் என் தந்தை ஒவ்வொறு வருடமும் ஒரு நாட்குறிப்பேட்டைத் தருவார்.ஆனால் அப்பொழுது அது எனக்கு படம் வரையவும்,மனப்பாடம் செய்த செய்யுளை எழுதிப்பார்கவுமே பயன்பட்டது.
எனது தாத்தா இறந்தபோது அவரின் பொருட்களைப் பார்க்க எனக்க வாய்ப்பு கிடைத்து. அவரது உடைமைகள் அனைத்தும் பெரிய பெட்டிகளில் இருந்து. அதல் ஒரு பெட்டி முழுவதும் நாட்குறிப்பேடுகளால் நிறைந்திருந்து. அப்பொழுது அது ஒரு பெரும் வியப்பை எதுவும் ஏற்ப்படுத்தவில்லை. ஆனால் தேவை இருக்கும் போதே மனிதன் ஒன்றை நாடவேண்டியுள்ளது. சில முக்கிய நிகழ்வுகளேயும் அதன் துல்லிய விவரங்களையும் எனது குடும்பத்தார் அரிய அந்த நாட்குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. உதாரணமாக எனது அத்தை மகளின் பெயர் சூட்டுவிழா மற்றும் கிறிஸ்துவ முறைப்படி செய்யும் திருமுழுக்கு என்று நிகழ்ந்து என்று என் அத்தை மற்றும் மாமாவிற்கே தெரியவில்லை. அது இருந்தால் மட்டுமே அவளால் செவிலியர் பயிர்ச்சிப் படிப்பில் சேர முடியும் என்ற நிலைமை .
என் பாட்டி சொன்ன அறிவுரைப்படி கடைசியாக அனைவரும் என் தாத்தாவின் நாட்குறிப்புகளில் தேடி அதை கண்டும் பிடித்தனர். அவ்வாறாக தேடும் போதே அதின் அவசியம் உணர்ந்தேன்.நான் பிறந்த நாளை அவர் தன் நாட்குறிப்பில் எழுதியிருப்பதை மிகவும் வியந்தேன். அப்பொழுது என்னை நானே பாக்கியசாலியாக கருதினேன். அவர் இவைகளை செய்ததின் நோக்கம் என்ன என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் என்னால் உறுதியாகக் கூறமுடியும். அவர் தன் கடமையை செய்வதில் கருத்தாக இருந்துள்ளார். காலச்சுவடுகள் பராமரிக்கப்பட்டுப் பதியப்பட்டுள்ளது.
எனது நாட்குறிப்பு எழுதும் பழக்கம் ஆரம்பித்து 2009ஆம் ஆண்டொடு ஐந்தாண்டுகளாகப்போகிறது. எழுதும் போது ஒரு கேளிக்கையாகவே மற்றவர்களுக்கு அது தெரிந்து. முக்கியமாக எனது நண்பர்கள். உனக்கு மறதி உண்டோ? என்றும் வினாவினார்கள். அது உண்மைதான். ஆனால் எனது பழக்கத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இன்றுவரை, நான் எழுதிய நாட்குறிப்பே எனக்கு பலவிதத்தில் உதவியாக இருந்துள்ளது. இன்று ஒவ்வொறு நாளிலும் என் வாழ்வில் நடக்கும் செயல்கள் மற்றும் சம்பவங்கள் எனது நாட்குறிப்பில் பதியப்படுகிறது.
சில நேரங்களில் இப்பழக்கம் எனக்கு மரபுமூலம் வந்திருக்குமோ என்றும் ஒரு சந்தேகம். ஏன் என்றால் எனது அன்னை ஒரு வரலாற்று ஆசிரியை!

Comments (0)
Post a Comment