Posted by Shyam sharai | Posted in lifestyle | Posted on 8:08 PM
இன்று இசை அனைவருக்கும் சென்றடைகிறது. முந்தய காலம் போல் இசை என்பது மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே சொந்தம் என்று கூறமுடியாது. இசை பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளது.
சோனியின் வாக்மேன் இதில் முக்கிய பங்கை வகுத்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது. இசையை கையடக்க கருவியில் கொண்டு வந்துள்ளது.இன்று அனைவரின் மூன்றாம் கையாக மாறிவிட்ட அலைபேசியையும் அது விட்டுவைக்கவில்லை. சோனி தன் தாயாரிக்கும் அலைபேசியில் வாக்மேன் தொழில்நுட்பம் கொண்ட அலைபேசிகளை W-Series என்னும் வரிசையில் தயாரித்து இசையின் துல்லியத்தைத் தருகிறது.
இந்தியாவில் நோக்கியா என்றால் 2வயது குழந்தைக்குக் கூட தெரியும் அளவிற்க்கு சக மக்களிடம் ஊடுருவியிருக்கும் அலைபேசி தயாரிப்பு நிறுவனம், இசையடக்க அலைபேசியை எக்ஸ்பெரஸ் மியூசிக்{Xpress Music} என்ற வரிசையில் தன் வெளியிட்டை இடுகிறது.
இப்போது இவ்விரண்டின் பிரபலத் தன்மையையும், எதை மக்கள் விரும்புவார்கள் என்பதைப் பற்றியும் ஒரு அலசல்
இசைப் பிரியர்கள் தங்கள் இசையை துல்லியமாகவும், தரமாகவும் கேட்க சோனியையே நாடுவார்கள். ஆனால் சோனியில் மற்ற அம்சங்கள் தரமாக ஒத்துப்போவதில்லை. முக்கயமாக மின்கல சேமிப்புதிறன் மற்ற அலைபேசியை விட குறைவாகவே சோனியில் காணப்படுகிறது. மற்றும் W-Seriesல் வரும் அதிகவிலை அலைபேசிகளில் மற்ற அம்சங்களுக்கு முக்கியதுவம் தரப்படுவதில்லை. அவ்வாறாக விலை குறையக் குறைய அம்சங்களும் குறைகிறது. W200i முதல் W960i வரை ஒப்பிட்டால் நிறை குறைகள் தெரியவரும்.
நோக்கியாவிற்க்கு இசைப்பதிப்பு அலைபேசிகள் புதியது என்பதால் ஆரம்பகால பதிப்புகளில் சரிவர தரமாக விளியிட முடியவில்லை. இன்று சிறிது முன்னேற்றம் தெரிகிறது. ஆனால் அதிலும் சிறிய சிக்கல்.Music playerகள் பயனீட்டாளர் வசதியாக{User friendly} இல்லை என்பது உண்மை. Auto-update,Stream line playing போன்றவற்றை வைக்காதது குறைகளே. ஆனால் 5130முதல் 5800வரை ஒப்பிட்டு பார்க்கும் போது சோனியைவிட குறைகள் குறைவாகவே உள்ளன.
இன்று மக்கள் இவ்வனைத்து வசதிகளையும் குறைந்தவிலையில் எதிர்பார்கிறார்கள். இதை சோனி, நோக்கியாவால் பூர்த்தி செய்ய சிறிது காலம் எடுக்கும். இதே நேரத்தில் சற்று குறைவான விலையில் சற்று தரமான அலைபேசிகளை எல்.ஜி, சேம்சங் போன்ற நிறுவனங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு தயாரிக்கின்றன.
மேல் நாட்டு மோகம் வழியாக இந்தியா வந்த உலகின் மிக சொகுசு அலைபேசி என்றெல்லாம் வர்ணிக்கப்படும் ஐ போன்{i phone} இந்திய பதிப்புகளில் வந்துவிட்டது. ஆனால் அது சற்றும் இந்திய மக்களுக்கு ஒத்துவரா ஒரு அலைபேசி. சுமாரான தரம் உள்ள இசையை மட்டும் தந்து, இந்தியாவில் இன்னும் விரிவடையாத 3-G தொழில் நுட்பத்தையே சார்ந்துள்ள அலைபேசியை உயர்ந்தவிலை தந்து வாங்க வேண்டும் என்ற அவசியம் இந்தியனுக்கு இல்லை.
மேல்நாட்டு மோகம் என்னும் போது இன்னொன்று நினைவிற்கு வருகிறது. சீன அலைபேசிகள் குறைந்த விலையில் கிடைப்பதால் தரம் குறைவாக இருந்தாலும் மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் சில தேசிய பாதுக்ப்பு காரணமாக டிசம்பர் 2009 முதல் அவைகளும் தடை செய்யப்படவுள்ளன.
எது எப்படி இருந்தாலும் சரி, இந்திய மண்ணில் ஒரு அலைபேசி நிறுவனம் நிலைநிற்க வேண்டும் என்றால், மக்கள் தேவைகளை பூர்த்தி செய்தாக வேண்டும்.

அடடடடடா ...
அலசுன அலசுல போன் ஊறி சாயம் போய் சோப்பு டப்பா ஆகிடுச்சு