நான் வெறுத்த ரயில் பயணம்!

1

Posted by Shyam sharai | Posted in | Posted on 7:21 PM

SECOND SLEEPERஐ விட சிறிது அளவே அதிக கட்டணம், ஆகவே
உனக்கு AC 3TIERல் முன்பதிவு செய்துள்ளேன் என்றார் தந்தை.
அப்போது எனக்கு ஆனந்தமாகத்தான் இருந்தது.
ஆனால் பயணம் ஆரம்பித்து 5நிமிடத்தில் கூளிர் சாதண COACHஇன்
 சுயரூபம் புரிய வந்தது. மயாண அமைதி எங்கும் நிலவியது. புண்ணகைப்பது ஏதே தேச தூரோகம் என்பது போல் முறைத்த சக பயணிகள். என் உடைமைகளை வைக்கக்கூட அனுமதி கேட்கவேண்டியதாயிருந்தது. எங்கு செல்கிறீர்கள் என்று கூட கேட்க யாரும் தயாராக இல்லை.
 அலைபேசியில் உள்ள பாடல்களும், ஆனந்த விகடனும், அன்னை சமைத்துத் தந்த எலுமிச்சை சாதமே  என் துனையாக கருதினேன். மனதில் பல சிந்தனைகள் உதிக்க ஆரம்பித்தன! ரயில் பயணச்சீட்டுப் பரிசோதகர் பார்க்க இயக்குனர் சமுத்திரக்கனி போல் உள்ளார் என்பது முதல் இந்த கட்டுரையை என் வலைப்பூவில் பதிவு செய்ய வேண்டும் வரை அச்சிந்தனையில் அடங்கும். பொதுவாக யாரும் தனிமையை விரும்ப மாட்டார்கள். அதில் நான் முதலில் வருவேன். இந்தப்பயணம் நான் தனித்திருப்பது போலவே உணர்த்தியது.
கொடுமையிலும் கொடுமை என்னவென்றால் என்னை சுற்றியிருந்தவர்கள் அனைவரும் தமிழர்கள் ஆனால் இதுவரை அவர்களிடம் இருந்து தமிழை நான் கேட்டவே இல்லை.
 அலைபேசியில் சமிக்கை கிடைத்தவுடன் இக்கட்டுரையை பதிவு செய்துவிட்டு, தந்தையிடம் தயவு செய்து முதல் வகுப்பில் முன்பதிவு செய்யவேண்டாமென கேட்டுக்கொண்டேன்.